இந்திய புகையிரத நிலையங்களில் விரைவில் டிஜிட்டல் ஹாட்ஸ்பொட்!

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

டிஜிட்டல் இந்தியா என்னும் தொனிப்பொருளின் ஒரு அங்கமாக இந்திய புகையிரத நிலையங்கள் பலவற்றில் தற்போது Wi-Fi வசதி வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இப்படியிருக்கையில் விரைவில் இந்திய முழுவதிலும் உள்ள தேர்வு செய்யப்பட்ட சுமார் 7,000 புகையிரத நிலையங்களில் டிஜிட்டல் ஹாட்ஸ்பொட் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

advertisement

Railwire Saathi எனும் திட்டத்தின் கீழ் இந்த ஹாட்ஸ்பொட் வசதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த தகவலை ரயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை இந்த திட்டமானது பெரிய நகரங்களை இலக்காகக் கொண்டு அல்லாமல் பின்தங்கிய நகரங்களையே அடிப்படையாகக் கொண்டதாக விளங்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்திற்காக இந்திய ரூபாவில் 1,500 கோடி முதல் 2,000 கோடி வரை செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தவிர அடுத்த இரண்டு வருடங்களில் முற்றுப்பெறவுள்ள இத் திட்டத்தின் ஊடாக 30,000 பேர் வரையில் வேலைவாய்ப்பினை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments