கூகுள் மேப் தரும் புதிய அட்டகாசமான வசதி பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுளினால் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் மேப் சேவையை இன்று மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இச் சேவையை மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்கான அப்பிளிக்கேஷன்களும் உள்ளமை தெரிந்ததே.

இந்த அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்றினை கூகுள் நிறுவனம் உட்புகுத்தியுள்ளது.

அதாவது தமது வாகனங்களை பார்க் செய்துவிட்டு பார்க் செய்த இடத்தினை மறந்துவிடுபவர்களுக்காக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி காரை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தினை ஞாபகப்படுத்திவிடுகின்றது.

இவ் வசதி iOS மற்றும் Android சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் மேப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பில் கிடைக்கின்றது.

மேலும் பார்க் செய்த இடத்தின் புகைப்படத்தினை சேமித்து வைத்திருப்பதுடன், பார்க்கிங் இடத்தினை நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments