வாட்ஸ் அப் பீட்டா பதிப்பில் பிழை: பயன்படுத்த வேண்டாம் என தகவல்

Report Print Meenakshi in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரபல வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் வாட்ஸ் அப்-ல் வரும் செய்திகளை ஐபோனில் உள்ள ’சிரி’ வசதியுடன் வாசிப்பதற்கான மாற்றத்தினை ஏற்படுத்தியது.

advertisement

தற்போது வாட்ஸ் அப் சோதனைக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பினை தரவிறக்கம் செய்த பயனாளர்கள் ஊடக செய்திகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.


மேலும் மெசேஜ்களை அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் வாட்ஸ் அப் பீட்டா 2.17.140 பதிப்பானது இன்னும் தயாராக இல்லை.

மேலும், சரியாக முடிவுறாத நிலையில் உள்ள இந்த பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யவேண்டாம் என வாட்ஸ் அப் பீட்டா பதிப்பின் சோதனையாளர் எச்சரித்துள்ளார்.

மற்ற பிழைகளை காட்டிலும் சற்று முக்கியமான பிழை இதுவாகும். எனவே தரவிறக்கம் செய்யும் முன்னர் யோசித்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments