ஐபோன்களில் 5G தொழில்நுட்பம்: பரீட்சிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com

தற்போது உள்ள இணைய வலையமைப்புக்களில் 4G தொழில்நுட்பமே வேகம் கூடியதாக காணப்படுகின்றது.

3G தொழில்நுட்பத்தினை விடவும் ஏறத்தாழ 100 மடங்கு வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்யக்கூடிய 4G தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்நிலையில் அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பமான 5G ஆனது தற்போது பரிசோதனை மட்டத்தில் காணப்படுகின்றது.

எனினும் சில நிறுவனங்கள் இத் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன.

எனவே விரைவில் 5G தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரலாம்.

இதனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் கைப்பேசிகள் குறித்த தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கான பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

5G தொழில்நுட்பமானது 4G தொழில்நுட்பத்தினை விடவும் பல மடங்கு வேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments