பயனர்களுக்கு நிம்மதி தரக்கூடிய பொறிமுறையை அறிமுகம் செய்யும் கூகுள்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை உலக அளவில் பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இச்சேவையிலும் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை திருடுவது தொடர்கதையாக காணப்படுகின்றது.

advertisement

இதனை தவிர்ப்பதற்கு ஜிமெயிலில் புதிய பொறிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஈமெயில் பிஸ்ஸிங் எனப்படும் குறித்த ஹேக்கிங் முறையை தவிர்ப்பதற்கு Machine Learning முறையைப் பயன்படுத்தி மென்பொருள் ஒன்றினை கூகுள் உருவாக்கியுள்ளது.

இம்மென்பொருளானது 99.9 சதவீதம் துல்லியமாக செயற்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 50 தொடக்கம் 70 சதவீதம் வரையான மின்னஞ்சல்களை ஸ்பார்ம் என இம் மென்பொருள் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் ஜிமெயில் சேவையை பாதுகாப்பான முறையில் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments