பேஸ்புக் கணக்கு இல்லாமல் பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்துவது எப்படி?

Report Print Raju Raju in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com

பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தான் பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என பலர் நினைப்பது உண்டு.

ஆனால், பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்தவர்களும், பேஸ்புக் கணக்கே இல்லாதவர்களும் கூட மெசஞ்சரை பயன்படுத்த முடியும்.

பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு மெசஞ்சரை பயன்படுத்தும் வழி
  • பேஸ்புக்கின் டீ-ஆக்டிவேட் பக்கத்தை திறந்து, அதன் கீழ் பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • கடைசியில், உங்கள் பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்தாலும், பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தலாம் என்ற ஆப்ஷன் இருக்கும்.
  • அதை அப்படியே விட்டு விட வேண்டும். அது கிளிக் செய்யப்பட்டிருக்க கூடாது.
  • அதற்கு கீழே உள்ள Deactivate-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்போது டீ-ஆக்டிவேட் நிலையில் பேஸ்புக் கணக்கு இருக்கும். இப்போது செல்போன் அல்லது கணினியில் பேஸ்புக் மெசஞ்சர் கணக்கை திறக்க வேண்டும். அதன் பின்னர் நமது நண்பர்களுடன் மெசஞ்சரில் நாம் உரையாட தொடங்கலாம்.
பேஸ்புக் கணக்கே இல்லாதவர்கள் பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்துவது எப்படி?
  • ஆண்ட்ராய்ட் iOS, அல்லது விண்டோஸ் போன்களில் பேஸ்புக் மெசஞ்சர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • செயலியை திறந்து நமது போன் நம்பரை பதிவிட வேண்டும்.
  • Continue என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது நமது செல்போன் நம்பரை சரி பார்க்க code எண், SMS மூலம் வரும்.
  • இதன் பிறகு பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தி நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்ப தொடங்கலாம்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments