கூகுள் புதிதாக அறிமுகம் செய்யும் Pixelbook பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் Pixel 2 மற்றும் Pixel 2 XL எனும் இரு புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

குறித்த கைப்பேசிகளை அறிமுகம் செய்து வைக்கும்போது மேலும் சில சாதனங்கள் தொடர்பிலான அறிவித்தல்களை வெளியிட்டிருந்தது.

இவற்றுள் ஒன்றுதான் Pixelbook ஆகும்.

இது உயர் வினைத்திறனுடன் செயற்படக்கூடிய குரோம்புக் ஆக அமைந்துள்ளது.

12.3 அங்குல அளவு, 2400 x 1600 Pixel Resolution உடைய LCD திரையினை இம் மடிக்கணினி கொண்டுள்ளது.

மேலும் ஏழாம் தலைமுறைக்குரிய Intel Core i5 அல்லது i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM, 128GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு நினைவகங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 1.1 கிலோ கிராம்கள் எடை உடையதாக இருக்கும் இக் கணினியின் விலையானது 99 அமெரிக்க டொலர்களாகும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்