இத்தாலியில் 30000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள்! இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம்

Report Print Vethu Vethu in வேலைவாய்ப்பு
0Shares
0Shares
lankasri.com

2017 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இத்தாலியில் பல்வேறு துறைகளில் காணப்படுகின்ற 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் வாய்ப்புகளில் 17 ஆயிரம் தற்காலிக தொழில் வாய்ப்புகள் வெளிநாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகள் இந்த தொழிலுக்காக விணப்பிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு மார்ச் மாதம் 28ஆம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இந்த 17 ஆயிரம் தற்காலிக தொழில்வாய்ப்பு பருவ காலத்தில் இத்தாலியில் திறக்கப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல் மற்றும் விவசாயத் துறைகளில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த தொழில்வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கும் போது இத்தாலி உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.'

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments