யாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளின் கவனத்திற்கு

Report Print Thamilin Tholan in வேலைவாய்ப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளுக்கு யாழ்.நகர வர்த்தக நிலையங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். வணிகர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

யாழ் நகர வர்த்தக நிலையங்களில் சிட்டை லிகிதர்கள், பொருட்கள் பொதி செய்பவர்கள், உதவியாளர்கள், சாரதிகள், காசாளர்கள், உதவியாளர்கள்,கணக்கு பதியுனர், கணனி இயக்குனர்கள், உதவி முகாமையாளர்கள் போன்ற பணிகள் ஆற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த பணிகளில் சேர விரும்புவோர் யாழ் வணிகர் கழகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு உறுதி செய்யப்படும். இந்த தொழில் வாய்ப்புக்களுக்காக ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

இதேவேளை, 021 222 8593 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். வணிகர் கழகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments