யாரிடமும் கைகட்டி வேலை செய்யாமல் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க தற்போது பரபரப்பான இருக்கும் சில தொழில்களை பற்றி காண்போம்.
Website Development
கணினியில் புகுந்து விளையாடும் திறமை உங்களிடம் உள்ளதா? அப்படியென்றால் வேறு நிறுவனங்களுக்கு வெப்சைட்களை டிசைன் மற்றும் டெவலப் செய்ய தற்போது கடும் கிராக்கி உள்ளது. இதை செய்வதின் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம்.
Catering Business
நீங்கள் சமையல் செய்வதிலும் அதை பற்றிய விடயங்களிலும் கைதேர்ந்தவராக இருந்தால் இந்த தொழிலை தொடங்கலாம். உலகளவில், உணவின் தேவை அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை மறவாதீர்கள்.
Writing
நன்றாக எழுதும் திறமையிருப்பவர்கள் இதை செய்யலாம். நாளிதழ்களுக்கு, புத்தகங்களுக்கு கதை போன்ற சுவாரசியான விடயங்களை எழுதி தருவது மற்றும் ஆன்லைனில் எழுதுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளது.
Day care
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு போகும் காலமிது! தாங்கள் வேலையிலிருந்து வீட்டுக்கு வரும் வரை தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ள பலர் விரும்புவார்கள். வீட்டில் இருப்பவர்கள், அதிலும் முக்கியமாக பெண்கள் மற்றவர்கள் குழந்தையை பார்த்து கொண்டு அதன் மூலம் சம்பாதிக்கலாம்.
Handcraft Items
கைவினை பொருட்களை செய்வதில் பலர் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் இது தொடர்பான நிறுவனங்களை தொடர்பு கொண்டால் வீட்டிலிருந்தே நம் திறமையை கொண்டு சம்பாதிக்க முடியும்.
Herb farming
விவசாயம் செய்வதில் பலருக்கு நாட்டமிருக்கலாம். அதுவும் இயற்கையான காய்கறிகள், பழங்களை தரும் மூலிகை விவசாயத்தை ஒரு சின்ன இடத்திலோ அல்லது வீட்டு மாடியிலேயே கூட தொடங்கலாம்.
அதில் விளையும் பொருட்களை ஹொட்டல்கள், காய்கறி கடைகள், சூப்பர் மார்கெட்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.
Elderly Care Business
பல வீடுகளில் வயதான முதியவர்களை பார்த்து கொள்ள ஆட்கள் தேவைப்படும். இதை ஒருவர் செய்யும் போது பணம் கிடைப்பது மட்டுமில்லாமல் சேவை செய்த மனத்திருப்தியும் ஏற்ப்படும்.
Consulting
எதாவது ஒரு பிரிவில் நாம் கெட்டிகாரராக இருந்தால், எடுத்துகாட்டுக்கு வணிகம், மார்க்கெட்டிங், தியானம் போன்றவற்றில் நமக்கு பல விடயங்கள் தெரிந்திருந்தால், அதை மற்றவர்களுக்கு சொல்லி தரும் ஆலோசனை கூடம் போல இதை செய்யலாம்.