இதை மட்டும் செய்தால் சொந்த தொழிலில் வெற்றி தான்: சூப்பர் டிப்ஸ்

Report Print Raju Raju in வேலைவாய்ப்பு
914Shares
914Shares
lankasrimarket.com

இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் மற்றவர்களிடம் கைக்கட்டி வேலை செய்வதை காட்டிலும் சொந்தமாக தொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்றம், இறக்கம் என பல விதமான விடயங்களை சொந்த தொழில் செய்வோர் சந்திக்க நேரிடும். கீழ்வரும் எளிய ஆலோசனைகளை பின்பற்றினால் சொந்த தொழிலில் மிக பெரிதாக சாதிக்கலாம்.

வாடிக்கையாளார்களை கவருதல்

Customer Is The King என்பது புகழ்பெற்ற பழமொழி! எந்தவொரு தொழிலும் வாடிக்கையாளர்களை நம்பி தான் தொடங்கபடுகிறது. அதனால் எது செய்தாலும் அது வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் நேர்மையையும், உண்மையையும் காட்டினால் தொழிலில் வெற்றி உறுதி.

உதவி கேளுங்கள்

தொழிலுக்கு நாம் தான் முதலாளி எனபதால் எல்லா வேலைகளையும் நம் தலையில் போட்டு கொள்ள வேண்டும் என அவசியமில்லை.

நாம் பணிபுரியும் துறையைப் பற்றி நன்கறிந்த நம்பகமான வழிகாட்டியை கண்டறிந்து அவர்களை உடன் வைத்து கொள்ளலாம் மற்றும் நிதி விவரங்களை கவனித்துக் கொள்ள தனி குழுவை கூட அமைக்கலாம்.

சவால்களை சந்திக்க வேண்டும்

தொழில் என்றாலே போட்டிகள் அதிகம் இருக்கும். வெற்றி, தோல்வி என இரண்டும் வரலாம். தோல்வியை கண்டு எப்போதும் துவண்டு விட கூடாது.

எப்பேற்ப்பட்ட சவால்கள் வந்தாலும் நாம் நம் இலக்கை நோக்கி உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை மறவாதீர்கள்.

பொறுமை அவசியம்

மிக பெரிய வெற்றி அடைந்த சாதனையாளர்களுக்கு அந்த வெற்றியானது உடனே கிடைத்திருக்காது.

தன்னம்பிக்கையையும், உழைப்பையும் விதையாக போட்டு பொறுமையாக செயல்பட வேண்டும்.

அனைத்தும் உடனே நடக்க வேண்டும் என நினைக்க கூடாது, இப்படி நினைத்தால் மன அழுத்தம் தான் ஏற்படும்.

திட்டமிடுதல் மற்றும் மறு ஆய்வு

எந்தவொரு தொழிலை நடத்தினாலும் சவால்களையும் குழப்பங்களையும் சந்திக்க நேரும். இதிலிருந்து விடுபட சிறிய மற்றும் பெரிய அளவிலான திட்டமிடல் அவசியம்.

அதே போல் அவற்றை முறையான கால இடைவெளியில் மறு ஆய்வு செய்வதும் அவசியம்.

சரியாக திட்டமிடுவதால் நம் இலக்கை சரியாக அடைய முடியும் மற்றும் நாம் செய்த வேலையை மறுஆய்வு செய்வதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் நம் செயல்திறன் சிறப்பாக உள்ளதெனவும் எந்தெந்த பகுதிகளில் கவனம் செலுத்தி மேலும் கடுமையாக உழைக்கவேண்டுமெனவும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments