வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்த அவுஸ்திரேலியா

Report Print Arbin Arbin in வேலைவாய்ப்பு
0Shares
0Shares
Cineulagam.com

அவுஸ்திரேலியாவில் துரித உணவு சேவை துறையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா சலுகையை பெருமளவில் நிறுத்தப்போவதாக குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மக்களின் வேலை வாய்ப்புக்களை பாதுகாத்திடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள வேலைவாய்ப்பு பற்றாக்குறையை சமாளிக்க திறமையான பணியாளர் விசா அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பீட்டர் டட்டன், அவுஸ்திரேலிய பணியாளர்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தேவைக்கேற்ப வெளிநாட்டு பணியாளர்களுக்கும் விசா வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்தே மெக்டொனால்ட்ஸ், கேஃஎப்சி மற்றும் ஹங்கிரி ஜேக்ஸ் போன்ற துரித உணவகங்களில் பணிபுரிய 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு, 457 என்றழைக்கப்படும் பணி விசா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்கு இந்த விசா கட்டுப்பாடுகள் பொருந்தாது என தொழிலாளர் நலத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments