இனி இந்த துறை சார்ந்தவர்களுக்கு எச்-1பி விசா இல்லை: டிரம்ப் அரசு திட்டவட்டம்

Report Print Arbin Arbin in வேலைவாய்ப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

கணனி சார்ந்த சிறப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் எச்-1பி விசா இனி முதல் வழங்கப்பட மாட்டாது என அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2000-வது ஆண்டில் கணனி துறையில் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்க ஏராளமான கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு (Computer Programmer) அமெரிக்க நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதற்காக 2000-வது ஆண்டு டிசம்பர் 22-ம் திகதி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிறப்பித்த உத்தரவில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 17 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு எச்-1 பி விசா வழங்கப்பட்டு வந்தது. அது இனி வழங்கப்பட மாட்டாது. புதிய நடைமுறை அக்டோபர் 1, 2017 முதல் அமலுக்கு வரும். இதுதொடர்பான திருத்த அறிக்கை மார்ச் 31-ல் வெளியாகியுள்ளது.

ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள ஏராளமான இளைஞர்களுக்கு இப்புதிய திருத்தம் பெருத்த ஏமாற்றமளிப்ப தாக இருக்கும். இவர்களது விண்ணப்பம் அக்டோபர் 1, 2017 முதல் பரிசீலிக்கப்படும்.

ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக சேரும் ஒருவர் அத்துறையில் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பார். அவர் நிறுவன வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியிருக்கக்கூடும்.

ஆனால் அதுவே சிறப்பு வேலைக்கான எச்-1பி விசா பெற தகுதியானது அல்ல என்று புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு வேலை அளிப்பதை மறுத்து, வெளிநாட்டினருக்கு வேலை அளிப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு கணனி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்-1பி விசா மூலம் வெளிநாட்டவர்களுக்கு வேலை அளித்துவிட்டு அமெரிக்கர்களைப் புறக்கணிப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை விடுத்துள்ள அறிக்கையில் இனி வரும் காலங்களில் விசா வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பொதுப் பிரிவில் 65 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இது தவிர மேல் படிப்புக்காக 20 ஆயிரம் பேருக்கு விசா அளிக்கப்படுகிறது. இவை அமெரிக்க பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டம் பயில்வோருக்காக அளிக்கப் படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணி புரிவதற்கு உரிய தகுதியோடு அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களுக்கு வேலை மறுக்கப் படுகிறது.

மாறாக அதிக ஊதியத்தில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படுவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை குறிப்பிட்டுள்ளது. இதைப் போக்குவதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments