புதிய வேலைவாய்ப்பு - டாக்ஸி நிறுவனத்தை விளம்பரபடுத்தும் திருநங்கைகள்

Report Print Nithya Nithya in வேலைவாய்ப்பு
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சமூகத்தில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளுக்கு டாக்ஸி நிறுவனம் ஒனறு 27 திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஊக்குவித்துள்ளது.

திருநங்கைகள் என்ற இந்த வார்த்தைகள் சமூகத்தில் இரண்டற கலந்த ஒன்று தான். சமூகத்தில் திருநங்கைகளும் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிக முனைப்பு காட்டி வருகிறது அரசு சாரா நிறுவனம் ஒன்று.

advertisement

அந்த நிறுவனத்தின் முயற்சியால் தனியார் டாக்ஸி நிறுவனம் ஒன்று அதனை விளம்பரபடுத்துவதற்கான அனைத்து பணிகளையும் திருநங்கைகளின் கைகளில் ஒப்படைத்து இருக்கிறது.

திருநங்கைகளுக்கு பகுதி நேரமாக கொடுத்திருக்கும் வேலையை விரைவில் நிரந்தரமாக்க முயற்சிப்பதாக உறுதியளிக்கும் டாக்சி நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீனிவாசன், திருநங்கைகளின் தற்போதைய நிலை மாற, வேலை வாய்ப்பே ஒரே வழி என்கிறார்.

தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கும் திருநங்கை மலாய்கா, இன்று தாங்கள் வேலை பார்க்க தொடங்கி இருக்கும் நிறுவனத்தை போலவே விரைவில் திருநங்கைகள் இனணந்து புதிய நிறுவனம் தொடங்குவோம் என்று நம்பிக்கை விதைகளை தூவும் வகையில் பேசுகிறார்.

இது தான் எங்கள் சமூகம் என்று ஏற்று கொண்ட திருநங்கைகளை இந்த சமூகமும் ஏற்று கொண்டு அவர்களுக்கு இன்னும் பல வேலை வாய்ப்புகளை தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

ஆண்கள் பெண்களை போன்று இனி சமூகத்தில் நாங்களும் மதிப்பாக வேலைக்கு செல்வோம் என திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments