இங்கு வீட்டு வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்குமாம்

Report Print Deepthi Deepthi in வேலைவாய்ப்பு
403Shares
403Shares
lankasrimarket.com

இந்தியாவில் குர்கான் நகரில் தான் வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு அதிக சம்பளமும், அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுப்பதால் அந்த நகரில் வேலை செய்வதை அதிக பெண்கள் விரும்புகிறார்கள்.

ஏசி உடன் கூடிய தனி அறை, எல்சிடி டிவி, டிடிஎ சேவை உள்ளிட்டவற்றையும் தங்களது வீட்டுப் பணிப்பெண்களுக்கு அளிக்கின்றனர்.

அதனால் இங்குப் பணிப்பெண்கள் வேலையை எளிதாக விட்டுவிட்டுச் செல்வதும் இல்லை

நம்மிடம் வேலை பார்க்கும் பெண்கள், தனியாக நேரத்தைக் கழிக்கத் தேவையான இடம் ஆகியவை அளிப்பதினால் நாம் ஒன்று குறைந்து விடப்போவதில்லை. அவர்கள் நமக்குச் சேவை செய்யத் தான் வருகிறார்கள், மூன்றாம் தர குடிமகன் போல நாம் அவர்களை நடத்துவது சரியல்ல என்றும் குர்கான் சேர்ந்த வணிகம் செய்யும் பெண்ணான தென்னி மேஜியா கூறுகிறார்.

முழு நேரப் பணிப்பெண் அல்லது இங்கேயே தங்கி வேலை பார்க்கும் பெண்கள் என அனைவருக்கும் இப்போது பணியின் போது ஓய்வு எடுக்கத் தனி அறை அளிக்கப்படுகின்றது.

குறிப்பாகப் பணிப்பெண்கள் அதிக நேரம் பணிபுரியும் போது இந்த வசதிகள் அளிக்கப்படுகின்றது.

இவை மட்டும் இல்லாமல் இலவச வைஃபை மற்றும் பிற ஊக்கத்தொகைகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

இவ்வாறு பணிப்பெண்களை கவனிப்பதால், நல்ல தரமான வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் கிடைப்பதாகவும் இதனால் தாங்கள் நிம்மதியாக இருப்பதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் பணிப்பெண்கள் சராசரியாக 8,500 ரூபாய் வரை மட்டுமே சம்பளமாக பெறுகின்றனர். நிறுவனங்களில் பணிப்பெண்களாக இருப்பவர்களும் அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை மட்டுமே சம்பளமாகச் சென்னையில் பெறுவது குறிப்பிடத்தக்கது.

டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பணிப்பெண்கள் சராசரியாக 8,500 ரூபாயும், பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் 7,000 ரூபாயும், குறைந்தபட்சமாகக் குஜராத் தலைநகரமான அகமதாபாத்தில் 6,500 ரூபாய் சம்பளமாகவும் வழங்கப்படுகின்றது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்