உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?

Report Print Jayapradha in குழந்தைகள்
83Shares
83Shares
lankasrimarket.com

நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தான் மனித உடல் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோனை சுரக்கின்றது.

இந்த ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும், அதைச் சீராக வைத்திருக்கவும் சில அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

குழந்தைகளின் உயரம் குறைவாக இருப்பதற்கு அவர்களின் மரபணு மட்டும் காரணமாக இருக்காது.

அவர்களின் உணவுகளில் ஊட்டச்சத்துள்ள உணவைச் எடுத்துக் கொள்ளமால் இருப்பதும், உடற்பயிற்சி போன்ற உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும் முக்கிய காரணமாகும்.

குழந்தைகள் உயரமாக வளர உதவும் வழிமுறைகள்.

  • பால், வெண்ணெய் ஆகியவைகளில் கால்சியம் அதிகம் உள்ளதால் தினமும் குழந்தைகள் ஒரு டம்ளர் பால் அருத்துவது நல்லது.
  • தினமும் உணவுடன் சேர்த்து ஒரு முட்டை உண்பது நல்லது. ஏனெனில் முட்டையில் அதிகளவு புரதம் நிறைந்து இருப்பதால் இது குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • மாம்பழம், பீச் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் குழந்தைகளுக்கு தருவதின் மூலம் அதில் உள்ள ஊட்டசத்துகளும் தாதுக்களும் குழந்தையின் எலும்பை வலுவாக்கி உயரமாக வளர உதவுகின்றன.
  • தினமும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. தண்ணீரில் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மெட்டபாலிசம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • உடலுக்குத் தேவையான விட்டமின் டி சூரிய ஒளி உடலில் படுவதால் கிடைக்கிறது. எனவே குழந்தைகளை காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் வெயிலில் விளையாட விடலாம்.
  • யோகா பயிற்சியில் ஈடுபடும் போது, தசைகள், எலும்புகளுக்கு வேலை கொடுப்பதால், உடல் வளர்ச்சிக்கு உதவும். எனவே தினமும் யோகா செய்யும்போது மனஅழுத்தம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்