விரைவில் அறிமுகமாகின்றது LG X500 ஸ்மார்ட் கைப்பேசி!

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasrimarket.com

LG நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை தென் கொரியாவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

LG X500 எனும் குறித்த கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர MediaTek MT6750 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியில் தரப்பட்டுள்ள 4,500 mAh மின்கலமானது 20 மணித்தியாலங்கள் வரை வீடியோக்களை பார்வையிடுவதற்கான மின்சக்தியை வழங்கவல்லது.

அத்துடன் ஒரு மணி நேரத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகக்கூடியதாகவும் இருக்கின்றது.

எதிர்வரும் 9 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 285 அமெரிக்க டொலர்களாகும்.

அதனைத் தொடர்ந்து அடுத்துவரும் வாரங்களில் ஏனைய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments