புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியது அமேஷான்!

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்துவரும் மிகப்பெரி தளமாக அமேஷான் கருதப்படுகின்றது.

இதனைத் தாண்டி இலத்திரனியல் சாதன உற்பத்தியிலும் குறித்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

advertisement

Amazon Fire எனும் ஸ்மார்ட் கைப்பேசி ஏற்கனவே இந்த நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் இதற்கு சிறந்த இடம் கிடைத்திருக்கவில்லை.

ஆனாலும் சற்றும் தளராத அமேஷான் நிறுவனம் Amazon Ice எனும் மற்றுமொரு கைப்பேசியினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இக் கைப்பேசியானது இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ளது.

இவற்றில் ஒன்று 5.2 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இவற்றில் பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 93 டொலர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments