கின்னஸ் உலக சாதனையுடன் அறிமுகமாகும் Jaguar E Pace கார்!

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நிறுவனமான Jaguar விலை உயர்ந்த கார்களை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த நிறுவனம் புதிதாக Jaguar E Pace SUV எனும் காரினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த காரின் அதி உயர் திறனை வெளிப்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

குறித்த கார் தொடர்பாக இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் சுமார் 15.3 மீற்றர்கள் தூரம் அக் காரினை பாயச் செய்து சாதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கார் ஏறத்தாழ 270 டிகிரியில் ஒரு முறை சுழற்சியினையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கார் தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments