குறைந்த விலையில் Civic Type R ரக காரை அறிமுகம் செய்ய தயாராகும் ஹொண்டா

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
177Shares
177Shares
lankasrimarket.com

ஹொண்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் Civic Type R எனும் கவர்ச்சிகரமான காரை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் இக் காரின் மற்றுமொரு வெர்ஷனை குறைந்த விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக் காரானது Honda Civic Type R Minus என்று பெயரிடப்படும் என தெரிகிறது.

முன்னர் அறிமுகமான Civic Type R ஆனது 304 குதிரை வலுவினைக் கொண்ட K20C1 ரக என்ஜின், 6 வேக மாற்றங்கள் கொண்ட கியரினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 35,000 டொலர்களாக இருக்கின்றது.

எனினும் புதிய வெர்ஷன் ஆனது 30,000 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்