ZTE அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் சீனாவை தளமாகக் கொண்ட ZTE நிறுவனம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Nubia N3 எனும் குறித்த கைப்பேசியானது 5.99 அங்குல அளவுடையதும் IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான FHD+ திரையினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் Qualcomm Snapdragon 625 Mobile Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

தவிர தலா 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, செல்ஃபிர கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி இக் கைப்பேசியானது சீனாவில் முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்