புதைக்குழியில் சிக்கிகொண்டால் தப்பிப்பது எப்படி?

Report Print Meenakshi in வாழ்க்கை முறை
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

நம்மில் பெரும்பாலானோர் புதைக்குழிகளை பார்த்திருக்க மாட்டோம். ஆனால், அக்குழிகளில் சிக்கி கொண்டால் மூழ்கி இறந்து விடுவோம் என்று நினைத்திருப்போம். அது தவறு.

ஆற்றுப்படுகைகள், கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு மட்டுமே புதைக்குழி அல்லது புதைமணல் பற்றி நன்றாக அறிந்திருப்பார்கள்.

advertisement

களிமண், மணல் , உப்புநீர் சேர்ந்த கலவையே புதை மணலாகும். இதன் மேற்பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டால் மணலானது இறுகிவிடும். இதலிருந்து வெளிவருவது சற்று கடினம்.

புதைக்குழியில் விழுந்துவிட்டால் அவசரப்படாமல், பொறுமையாக கையாளவேண்டும். விழுந்தவரை பிடித்து இழுத்து வெளியில் கொண்டு வர முயற்சித்தால் காயங்கள் ஏற்படும்.

புதைக்குழியில் விழுந்தவுடன் மணலின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக கூடி கெட்டியாகிவிடும். அப்போது மெதுவாக நம் கால்களை அசைக்கவேண்டும்.

இதனால் மணல் தன்மையானது குறையும். கால்களில் செருப்பு அணிந்திருந்தால் கழற்றி விடவேண்டும். கால்களை சைக்கிள் ஓட்டுவதை போன்று அசைக்க அசைக்க மணலில் இலகு தன்மை ஏற்படும்.

பின்னர், மெதுவாக முதுகினை பின்புறமாக சாய்க்கவேண்டும். நீச்சல் அடிப்பதை போன்று கைகளை அசைக்கவேண்டும். மூழ்கியவர் மெதுவாக மிதக்க ஆரம்பிப்பார். உடனே எழுந்துவிடாமல் படுத்து கொண்டே கரையினை அடையவேண்டும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments