இந்த நான்கில் நீங்கள் எந்த வகை? உங்களைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Arbin Arbin in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஒவ்வொருவரின் உடல் அமைப்பை வைத்தும் அவரைப்பற்றி சொல்லிவிட முடியும். அதாவது பொதுவாக நான்கு வகையான உடல் அமைப்புகள் உள்ளன. அந்த நான்கு வகை உடல் அமைப்பு குறித்தும், அவை தொடர்பான உடல் ஆரோக்கியம் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

ஹவர் கிளாஸ் (Hour Glass): இந்த உடல் அமைப்பு பெரும்பாலும் பெண்களுக்கு தான் இருக்கும். இந்த உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும்.

advertisement

இந்த உடல் அமைப்பு ஆரோக்கியத்தை சம நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதே நேரத்தில் பின்பகுதியில் கொழுப்பு அதிகம் சேர வாய்ப்பு உள்ளது. அதனால் சீரான உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

முக்கோணம் (Triangle): தோள்பட்டை குறுகலாகவும், இடுப்பு அளவு அகலமாகவும் இருப்பதை முக்கோணம் வடிவம் என்கிறோம். இவர்கள் இதய நலனில் அக்கறை கொள்வது அவசியம்.

ஆரோக்கிய உணவுகளை மட்டும் உட்கொண்டு எண்ணெய் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

தலைகீழ் முக்கோணம் (Inverted Triangle): இந்த அமைப்பை கொண்டவர்களை தான் மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்று கூறுகிறார்கள். தடகள வீரர்களின் உடல் அமைப்பு இப்படித்தான் இருக்கும். இவர்களுக்கு கொழுப்பு மார்பு மற்றும் முகத்தில் தான் சேரும். அதனால் ஆரோக்கியமான டயட் தேவை.

சதுரம் (Square): இடுப்பு பகுதியில் வளைவுகள் இல்லாத இவர்கள் கழுத்தில் இருந்து கீழே வரை ஒரே மாதிரியாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒல்லியாக தான் இருப்பார்கள்.

உடலின் எல்லா பகுதிகளிலும் கொழுப்பு சேரும் என்பதால், உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments