தனிமை வாழ்க்கையும், பரிதாப மரணங்களும்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

காலச்சூழலால் தனித்து வாழ்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் மரணமடைகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அது யாராலும் அறியப்படுவதில்லை.

என்றோ ஒருநாள் வெளி உலகுக்கு தெரியவரும் போது, பல நாட்கள் அல்லது வருடங்களுக்கு முந்திய மரணம் என்றால், அது மரியாதை இழந்த மரணம் தானே.

கெட்ட கனவு போல நேரும் இந்த தனிமை மரணம் தனக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை தன்னைப் பற்றி கவலைப்படவும் யாருமில்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்குதான்.

தாய் மற்றும் மகள் சடலம்

ஒரு வீட்டில் ஒரு தாய் மற்றும் அவளுடைய மகளின் உடல் பல நாட்களுக்கு பிறகு, பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பௌலின் மற்றும் கரோலின் பெஸெட் என்ற பெயருக்கு உரியவர்கள் என்பதும் தெரியவந்தது.

அந்த தாயாரின் வீட்டை பொலிசார் சோதனையிட வந்தபோது, இவர்கள் இறந்து கிடந்ததை அறிந்து உடல்களை கைப்பற்றினர்.

அவர்கள் பற்றி அண்டை வீட்டார் கூறியது, அந்த தாய் கணவர் இறந்ததால் 40 வயதில் துறவியானார். அவளுடைய மகளை 6 மாதங்களாக நாங்கள் பார்க்க முடியவில்லை.

ஆனால், ஜூலை 2013 ல் அந்த வீட்டில் ஈக்கள் மொய்த்தது என கூறினர். அதைவைத்து, ஜூன் மாதத்திலேயே இருவரும் இறந்திருக்கலாம் என பொலிஸ் கணித்தது. ஆனால், இருவரும் இறந்ததற்கான காரணம் சந்தேகத்திற்கு உரியது.

காருக்குள் பெண் சடலம்

பதப்படுத்தப்பட்ட சடலமாக ஒரு காருக்குள் அதன் பின்னிருக்கையில் இருந்த மிச்சிகன் பெண்ணைப் பற்றி பொலிஸ் இன்னும் குழம்புகிறது.

அந்த பெண்ணின் பெயர் பியா ஃப்ராங்கோப். அவள் இறந்து 5 வருடங்களுக்குப் பிறகே உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவள் குடும்பத்திலிருந்து பல வருடங்களாகவே எந்த அழைப்பும் வரவில்லை. கடைவீதியில் அந்த கார் பின்னோக்கி நிறுத்தப்பட்டுள்ளது. அவள் சடலத்தின் பின்பகுதி கார் இருக்கையோடு உறைந்து மம்மியாகி இருப்பது ஆச்சரியம்.

இது தற்கொலை அல்லது மருத்துவ சம்பந்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என பொலிஸ் தெரிவிக்கிறது.

சத்தானூகா சகோதரர்கள் சாய் நாற்காலியில்

ஆண்ட்ரூ, அந்தோணி ஜான்சன் என்ற 63 வயதுடைய இரண்டு சகோதரர்கள் சாய் நாற்காலியில் மரணித்து அழுகி இருந்ததை 2014 ல் பொலிசார் கண்டுபிடித்தனர். மரண காரணங்களுக்கு அறிகுறிகள் அங்கு இல்லை.

அவர்கள் 2011 முதல் அங்கு உள்ளனர். அவர்களை அரிதாகவே வெளியில் பார்க்க முடியும். அறுவைசிகிச்சைக்குரிய முகமூடி அணிந்து தோட்ட வேலையில் ஈடுபடுவர் என பக்கத்து வீட்டார் கூறினர்.

8 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலிய பெண்ணான நடாலி வுட் என்பவர் தனியாக 1924 லிருந்து அந்த வீட்டில் வசிக்கிறார். பிறகு, அவருடைய சகோதரர் மற்றும் அவருடைய மனைவியுடன் 1997 வரை சில வருடங்கள் வேறிடத்தில் வாழ்ந்தார்.

மீண்டும் பழைய வீட்டிற்கு வந்தார். கொஞ்சநாளில் நடாலிக்கு மூளையில் கட்டி இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தன் சகோதரரிடம் கூறியுள்ளார்.

நடாலிக்கும் சகோதரருக்குமான தொடர்பு அற்றுப்போகிறது. ஆனால், மூளையில் கட்டி ஏற்பட்ட சில மாதங்களில் நடாலி தனிமையில் இறக்கிறார். 8 வருடங்களுக்குப் பிறகே இறந்தது உறவினர்களுக்கு 2011 ல் தெரியவருகிறது.

அவரவரும் வேலைகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வேகமான வாழ்க்கையில், அடுத்த வீட்டை ஆராய நேரமிருக்காது. இதுபோன்ற சூழல்களால், சிலருடைய இறப்பு பல வருடங்களுக்கு கூட வெளித்தெரியாமல் இருந்துவிடுகிறது.

அனாதையாக வாழ்வதை விடவும் அனாதையாக செத்துக்கிடப்பது பரிதாபம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments