காலில் உள்ள விரல்கள்: உங்கள் குணநலன்கள் பற்றி சொல்வது என்ன?

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

ஒருவரின் கால் விரல் அமைப்புகளை வைத்து, அவர்களின் குணநலன்களை எப்படி? என்பதை பற்றி கூறிவிடலாம்.

பெருவிரல்

காலில் உள்ள பெருவிரலானது, மற்ற நான்கு விரல்களை விட பெரியதாக இருந்தால், அவர்கள் அதிக படைப்புத்திறன் கொண்டவர்களாகவும், அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வினை கண்டுபிடிக்கும் புத்திசாலியாக இருப்பார்கள்.

அதேபோல் மற்ற விரல்களை விட பெருவிரல் சிறியதாக இருந்தால், அவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களை செய்யும் திறமை கொண்டவராக இருப்பார்கள்.

இரண்டாம் விரல்

காலில் உள்ள இரண்டாம் விரல் பெரியதாக இருந்தால், அவர்கள் சமுதாயத்தில் நல்ல படைப்புத்திறன் கொண்ட ஒரு நல்ல தலைவராக விளங்குவார்கள்.

அதுவே இரண்டாம் விரல் சிறியதாக இருந்தால், அவர்கள் தனக்கு உள்ள வேலையை சுமையாக கருதாமல், எளிமையாக எடுத்துக் கொண்டு அந்த வேலைகளை சரியாக செய்து முடிக்கும் குணத்தை கொண்டவர்கள்.

மூன்றாம் விரல்

காலில் உள்ள மூன்றாம் விரல் மற்ற விரல்களை விட, பெரியதாக இருந்தால், அவர்கள் தனது பணியில் தனித்துவம் மற்றும் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

அதுவே மற்ற விரல்களை விட மூன்றாம் விரல் சிறியதாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

நான்காவது விரல்

காலில் நான்காவது விரல் மற்ற விரல்களை விட பெரியதாக இருந்தால், அவர்கள் தனது குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் விரல் சுருண்டிருந்தால், அவர்கள் உறவு முறையில் மகிழ்ச்சி இருக்காது.

அதுவே மற்ற விரல்களை விட நான்காவது விரல் சிறிதாக இருந்தால், அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.

சிறிய விரல்

கால்களில் அனைத்து விரல்களும் சிறியதாக இருந்தால், அவர்கள் குழந்தை மனம் கொண்ட தாராள மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் எந்த ஒரு பதவியையும் விரும்ப மாட்டார்கள்.

அதுவே கால் விரல்கள் ஒன்றன்பின் ஒன்றாக பெரிதாக இருந்தால், அவர்களின் வாழ்க்கை நடைமுறை சீராக இருப்பதுடன், அவர்களின் நட்பு வட்டாரம் மிக பெரியதாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments