ஒன்பது மணிநேரம் தூங்கினால் என்னாகும் தெரியுமா?

Report Print Santhan in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

உடல் மற்றும் மூளைக்கு நாம் கொடுக்கும் ஓய்வு தான் தூக்கம். இந்த தூக்கம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் நாம் பாதியளவு ஆரோக்கிய நன்மைகளை அடைந்துவிடலாம்

மிக குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது பல ஆரோக்கிய சீர்கெடுகளுக்கு வழிவகுக்கும் என்பது நமக்கு தெரியும், ஆனால் மிக அதிக நேரம் தூங்குவதும் கூட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது தெரியுமா?

  • அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் டிமென்ஷியா நோயால் தற்போது மட்டும் உலகளவில் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வருகின்ற 2050-ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் அல்சீமர் நோய் என்ற நோய்க்கு அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்கள் இந்த அல்சீமர் நோய் மற்றும் டிமென்ஷியாவால் உயிரிழந்துள்ளனர்.
  • மக்கள் தூங்கும் நேரத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களுக்கு அல்சீமர் நோய் வருவதற்கான வாய்ப்பு பத்து வருடத்தில் இரட்டிப்பாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • நீண்ட நேரம் தூங்குவதால், மூளையின் செயல்பாடு குறைகிறது, அதுமட்டுமின்றி சிந்திக்கும் திறனும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments