தூக்கத்தில் பற்களை கடிப்பதால் வரும் நோய்கள்

Report Print Santhan in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூங்கும் போது பற்களை கடித்தால் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் அது உடலில் பல்வேறு வகையான நோய்களை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

  • தூக்கத்தில் பல் கடிப்பதால், தலைவலி, பல் தேய்மானம், தூக்கமின்மை, ஈறுகளில் புண் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும்.
  • மேல் மற்றும் கீழ் தாடைகளில் உள்ள பற்களை ஒன்றாக அழுத்துவதால், பல் கூச்சம், பற்கள் உடைதல், பற்கள் விழுதல், முகம் மற்றும் மற்றும் தாடையில் வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • கார்டு அல்லது ஸ்ப்ளின்ட் ஆகிய கடினமான பிளாஸ்டிக் உபகரணத்தைப் பற்களில் பொருத்துவதன் மூலம் பற்கள் கடிப்பதை தடுக்க முடியும் எனவும், இதனால் பயப்பட ஒன்றும் தேவையில்லை என்றும் அதற்காக சிகிச்சை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
  • குறிப்பாக தூக்கத்தின் போது, மூச்சுத் திணறல், குறட்டை விடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளும் பற்களை கடிக்கும் பழக்கத்தை உண்டாக்கும்.
  • புகைப் பழக்கம், மது, மன அழுத்தம் போன்றவையும் பற்களை கடிக்கும் பிரச்சனை உருவாகும். இது போன்ற தீய பழக்கத்தில் இருந்து வெளியேறினால் பெரியவர்கள் எளிதில் குணமாகலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments