உங்களுக்கு பிடித்த பழத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிடலாம்

Report Print Printha in வாழ்க்கை முறை
2037Shares
2037Shares
lankasrimarket.com

பிறந்த நேரத்தின் ராசி, நட்சத்திரங்களை வைத்து, குணநலன்கள் மற்றும் எதிர்காலத்தை கணிப்பது போல, ஒருவருக்கு மிகவும் பிடித்தமான பழங்களை வைத்தும் கணிக்கலாம் என்று பழ ஜோதிடம் கூறுகிறது.

மாம்பழம்

மாம்பழப் பிரியரா இருந்தால், நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் மனம் மாற்றுவது என்பது மிகவும் கடினமானது. எல்லாரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க முயல்வீர்கள். க்ரியேட்டிவான விடயங்களை சாதரணமாக செய்யக் கூடியவராக இருப்பீர்கள்.

பப்பாளி

பப்பாளி பிரியராக இருந்தால், நீங்கள் மனதளவில் நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது தான் மிகவும் கடினம். எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும், அதில் உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம் பிரியராக இருந்தால், நீங்கள் மிகவும் மென்மையானவராக, பிறருடன் இரக்கத்துடன் பழகுவீர்கள். ஆனால் உங்களுக்குக் கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும். அதனால் பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள்.

உங்களுக்கு தன்னம்பிக்கையும் மிகவும் குறைவு. அதனால் உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழம் பிரியராக இருந்தால், நீங்கள் அதிக அளவு பொறுமையும் அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவராக இருப்பீர்கள். கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள்.

சண்டை சச்சரவை விரும்பாத நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத் துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்.

அன்னாசி

அன்னாசிப் பழம் பிரியராக இருந்தால், நீங்கள் எந்த விடயத்தையும் ஆலோசித்து நிதானமாக செயல்படுத்துவீர்கள். லாபம் ஏற்படும் தொழிலாக இருந்தால், அதில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக் கொள்வீர்கள்.

தன்னிறைவு, நேர்மையை கொண்ட நீங்கள் எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் துணையிடன் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும், அன்பை வெளிக்காட்டத் தெரியாததால், அவரின் வெறுப்பிற்கு ஆளாகுவீர்கள்.

திராட்சை

திராட்சை பிரியராக இருந்தால், உங்களுக்கு அதிக் கோபம் வரும். ஆனால் அதே வேகத்தில் போய்விடும். உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும் உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப்படும். நீங்கள் செய்யும் எந்தவொரு விடயத்தையும் அதிக ரசனையுடன் செய்வீர்கள்.

செர்ரி

செர்ரி பழத்தின் பிரியராக இருந்தால், உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடு மட்டுமே. குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது.

தொலில் எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும். உங்களுக்குக் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஆனால் ஒரே மாதிரியான சலிப்பான வேலைகளை விரும்ப மாட்டீர்கள்.

சீதாப்பழம்

சீதாப்பழம் பிரியராக இருந்தால், நீங்கள் எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள்.

விரிவான விளக்கம் அல்லது புள்ளி விவரங்கள் தொடர்பான பணி உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். புற அழகு, குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்த துணையை மட்டும் விரும்புவீர்கள்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தின் பிரியராக இருந்தால், நீங்கள் எந்தவொரு செலவுகளையும் தாராளமாக செய்ய விரும்புவீர்கள். ஒரு குழுவை வழி நடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும்.

மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் உங்களுக்கு உணர்சிகளை கட்டுப்படுத்த தெரியாது. எந்த வேலையைக் கொடுத்தாலும் அதீத ஆர்வத்துடன் எடுத்து செய்வீர்கள்.

மாதுளம்பழம்

மாதுளம் பழத்தின் பிரியராக இருந்தால், நீங்கள் ஒரு சிறிய விடயத்திற்கு கூட டென்ஷன் ஆகுவீர்கள். நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அதனால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடிப்பீர்கள். அதுவே உங்கள் குறைபாடாகும்.

தர்பூசணி

தர்பூசணி பழத்தின் பிரியராக இருந்தால், நீங்கள் மிகவும் எளிமையானவராக இருப்பீர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் மீது ஏதேனும் தவறு இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்க தயங்க மாட்டீர்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்