மனதில் நினைக்கும் உங்களின் ரகசியம்... ஈஸியாக கண்டுபிடிக்கலாம்

Report Print Printha in வாழ்க்கை முறை
278Shares
278Shares
lankasrimarket.com

கண்களை வைத்து ஒருவரது மனதில் நினைக்கும் விடயங்கள் என்னவென்பதை சரியாக கண்டுபிடித்து விடலாம்.

கண்களை வைத்து கண்டுபிடிக்கும் விடயங்கள்?
  • காதலில் விழுந்தவர்களை அவர்களின் கண்களை வைத்து கண்டுபிடித்து விடலாம். எப்படியெனில் அவர்களின் ரொமான்டிக்கான பார்வை மற்றும் கண் இமைக்கும் விதத்தில் ஏற்படும் மாற்றமாகும்.
  • ஒருவரின் பார்வையில் பல மாறுதல்களுடன், புன்னகை செய்துக் கொண்டு அவர்களின் கருவிழிகளை அடிக்கடி உங்களை பார்த்தவாறு இருந்தால், அவர்கள் உங்களிடம் கடலைப் போட நினைக்கிறார் என்று அர்த்தம்.
  • பொய் சொல்லும் போது, ஒருவரின் கண்கள் முகபாவனைக்கு ஏற்றவாறு இருக்காது. முக்கியமாக ஒருவர் பொய் சொன்னால், அவர்கள் மற்றவர்களின் கண்களைப் பார்த்து பேச தயங்குவார்கள்.
  • கோபமாக இருக்கும் போது அவர்களது கண்கள் சிறியதாக காணப்படும். அவர்கள் பார்க்கும் விதத்தில் ஒருவித மாற்றத்தை நன்கு காண முடியும்.
  • போதையில் இருப்பவரின் கண்களின் மணி சிறியதாக காணப்படும். முக்கியமாக கருவிழிகள் அடிக்கடி மேலே செல்லும். இதை வைத்து கண்டுபிடிக்கலாம்.
  • ஒருவர் உங்களை வெறுப்பதாக இருந்தால், அவர்கள் உங்களை அன்பான பார்வையில் பார்க்கமாட்டார்கள் மற்றும் புன்னகை செய்யவும் மாட்டார்கள்.
  • ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்கள், என்பதை கூட கண்களை வைத்து அறியலாம். எப்படியெனில் அவர்களின் கண்கள் தூங்கி எழும் போது எப்படியிருக்குமோ அதேபோல கண்கள் சிறியதாக தெரியும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்