சகுனத்தில் எது நல்லது? எது கெட்டது?

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

நன்மை, தீமை நடப்பதற்கு முன்னதாக நாம் அதை தெரிந்துக் கொள்ளும் அறிகுறியாக நடப்பதே சகுனம் என்பது நம் முன்னோர்களின் கருத்து.

நல்ல சகுனங்கள் என்ன?

 • யானை, குதிரை, பசு, கன்று, காளை, கன்னி, பல் மருத்துவர்கள், ரத்தினம், எரியும் நெருப்பு, தானியம், தயிர்பானை, சந்தனம், பிணம், பூர்ணகும்பம், அட்சதை போன்றவை நல்ல சகுனங்கள்.

 • வெள்ளை மாலை, குழந்தையுடன் பெண், எள், சலவைத்துணி, தாமரை, ஆடை அணியாத குழந்தை, சங்கு, நெய், பால், வாத்திய ஒலி, மாமிசம் போன்றவை எதிரே வந்தால் அதுவும் நல்ல சகுனங்கள்.

 • காலையில் சுமங்கலிப் பெண்களின் முகத்தில் விழிப்பது நல்லது.

 • பயணம் போகும் போது அழுக்குத் துணியோடு வரும் வண்ணாரைக் காண்பது நல்லது.

 • காகம் இடது பக்கமிருந்து வலப்பக்கம் பறந்து செல்வதைப் பார்த்தால் நல்லது.

 • வீட்டில் இருக்கும் போது காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பதற்கான நல்ல சகுனம்.

 • பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும். பல்லி மேற்குத் திசையில் இருந்து ஒலி எழுப்பினால் நல்லது நடக்கும்.

கெட்ட சகுனங்கள் என்ன?

 • எதிரில் வருபவர் எண்ணெய், மோர், உப்பு, வைக்கோல், எலும்பு, புல், சாம்பல், பஞ்சு, விறகு, வெற்று பாத்திரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வருவதை பார்த்தால் அது கெட்ட சகுனம்.

 • அலங்கோலமான ஆடைகளுடன் தலையை விரித்துப் போட்டு கொண்டு வருதல், அழுது கொண்டு எதிரில் வருவது, வேதம் கற்ற அந்தணர் தன்னந்தனியாக ஒருவராக எதிரில் வருதல் போன்ற காட்சிகள் கெட்ட சகுனங்கள் ஆகும்.

 • பூனை குறுக்கே போகுதல், நாய் குறுக்கே செல்லுதல், போர் வீரனைக் காணுதல், நாய் ஊளையிடுவதை கேட்பது, விதவையைக் காண்பது, மண்வெட்டியுடன் எதிரே வருவது, தும்மல் ஒலி கேட்பது போன்றவை கெட்ட சகுனங்கள்.

 • தலையில் முக்காடு போட்டவரை எதிரே காண்பது, கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்வது, காகம் வலமிருந்து இடமாகச் செல்வது, வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருவதைக் காண்பது, பாய் மற்றும் அரப்பு விற்பனை செய்பவரை காண்பது போன்றவையும் கெட்ட சகுனங்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்