இதில் எந்த எழுத்து உங்க பெயரில் அதிக முறை வருகிறது?

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

ஒருவரது பெயர் அவரது பிறப்பில் இருந்து இறப்பு வரை தாக்கத்தை உண்டாக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவரது பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் அதிக முறை இடம் பெறுகிறது? அதனால் அவர்கள் வாழ்வில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படலாம் என்பதை பார்க்கலாம்.

D, M, T

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிகமாக இடம் பெற்றிருந்தால், அவர்கள் கடினமாக உழைக்கும் குணம் கொண்ட நபர்களாக திகழ்வார்கள்.

இவர்கள் தொழில் செய்வதில், சொந்தமாக வேலை செய்வதில் அதிக முயற்சி காட்டலாம். சொந்த தொழில் செய்வது இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

E, N, H, X

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிகமாக இடம் பெற்றிருந்தால், அவர்கள் வாழ்வில் பணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இவர்கள் பணத்தை சேமிப்பதில், செலவு செய்வதில் பாதிக்கு பாதி ஜாக்கிரதையாகவும், அஜாக்கிரதையாகவும் இருப்பார்கள்.

V, U, W

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிகமாக இடம் பெற்றிருந்தால், அவர்கள் இயல்பிலேயே மனிதாபிமானம் அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் கடமையை செய்வதில் இருந்து தப்பி ஓட மாட்டார்கள்.

யாருக்கேனும் உதவி என்றால் முதல் ஆளாக முன்னே நிற்பார்கள். உணர்வு ரீதியாக பிணைந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு லக் என்பது கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்.

A, I, J, Y, Q

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிக முறை இடம் பெற்றிருந்தால், அவர்கள் மூர்கமாகவும், பேரார்வத்துடனும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களுக்கான சுதந்திரத்தை அதிகம் விரும்பி, வாய்ப்புகளை தட்டிக் கழிப்பது இவர்களின் உறவுகளிலும் தாக்கத்தை உண்டாக்கும்.

B, R, K

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிகமாக இடம் பெற்றிருந்தால், அவர்கள் இயற்கையாகவே அமைதியான நபராக காணப்படுவார்.

இவர்கள் மிக நெருக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு உறவில் பழகுவார்கள். இவர்களது பாதுகாப்பற்ற உணர்வு, வாழ்நாள் முழுக்க இவர்களுக்கு ஒரு தடையகாவே இருக்கும்

C, G, S , L

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிகமாக இடம் பெற்றிருந்தால், அவர்கள் இயற்கையாகவே நல்ல குணங்கள் கொண்டிருப்பார்கள். இனிமையாக, அக்கறையுடன், அன்புடன் பழகும் குணத்திற்கு அடையாளமாக காணப்படுவார்கள்.

இவர்களின் வாழ்க்கை முழுதும் தங்களை சுற்றி இருக்கும் நபர்களுக்கு பிடித்தமான நபராக திகழ்வார்கள்.

O, Z

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிகமாக இடம் பெற்றிருந்தால், அவர்கள் அதிக பிணைப்பு கொண்டு காணப்படுவார்கள். உதவி, ஆன்மீக செயல்களில் தங்களை ஈடுப்படுத்திக் கொள்வார்கள். படிப்பில் கெட்டியாக இருந்தாலும் தன்னடக்கமாக இருப்பார்கள்.

P, F

இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிக முறை இடம் பெற்றிருந்தால், அவர்கள், வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ்வார்கள். அவர்களது எண்ணம் சிறந்து காணப்படும். பெரிய அறிவாற்றலை கொண்ட இவர்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்