உங்க வீட்டில் 3 நபர்களுக்கு ஒரே ராசி இருந்தால்... அதிர்ஷ்டமா? ஆபத்தா?

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

ஒரு குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகிய மூவரும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால், பிரச்சனை இருக்குமா? அதற்கான பரிகாரம் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஒரே ராசி 3 பேர்களுக்கு இருந்தால் ஆபத்தா?

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுவார்கள்.

advertisement

அதனால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு திடீர் விபத்துகள், இழப்புகளை சந்திக்க நேரிடும்.

ஏக ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது.

எப்படியெனில் மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். அதுவே கணவன், மனைவியாக இருந்தால் பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் பல்வேறு இழப்புகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

பரிகாரம் என்ன?

ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏக ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில், ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால், சம்ஹார ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்று பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்