இப்படி உறங்கினால் கெட்ட கனவுகள் வராதாம்

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

உறங்கும் போது சிலரது கனவில் இறந்து போனவர்கள் வருவது, பேய் கனவுகள், விபத்துக்கள் போன்ற பல வினோதமான கனவுகள் அடிக்கடி உண்டாகலாம்.

ஆனால் சிலருக்கு உறக்கத்தில் கனவுகள் வராது, அப்படி வந்தாலும் கெட்ட கனவுகள் ஏற்படும். இதற்கான காரணம் என்னவென்பது பற்றி பார்க்கலாம்.

கனவுகள் வருவது ஏன்?

கனவுகள் என்பது பொதுவாக மனநிலையின் மேல்மட்டத்தில் தோன்றுவது, அதாவது நிறைவேறாத ஆசைகளின் எச்சம் தான் இந்த கனவுகள்.

கனவுகள் விழிப்புநிலை மனதில் தோன்றுபவை, ஆன்மா எனும் மனித சக்தியின் வாசலான, மனதின் கரைகளில் தோன்றுவது தான் கனவுகள் என்று கூறப்படுகிறது.

கனவின் விளைவு என்னாகும்?

கனவுகளை ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியில் நம்மால் உணர முடியும், ஏனெனில் சிலருக்கு அதன் பின் தூக்கம் கலைந்துவிடும்.

மூளையின் கட்டளைகள் மூலம் நமக்கு, தூக்கம் வருகிறது. சில சமயங்களில் அந்த இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படும் போது, தூக்கத்தில் கனவுகள் ஏற்படுகின்றது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, நம் வாழ்க்கையில் நடந்த அன்றாட நிகழ்வுகள் மற்றும் அதன் வீரியம் அறிந்து மேல்நிலையிலோ அல்லது ஆழ்மனதிலோ சேகரித்து வைக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வை தினமும் மூளை நடத்திக் கொண்டிருக்கும், கனவின் ஒரு பாதிப்பு தான் தூக்கத்தில் உளறுவது. இதுவும், உறக்கத்தின் நிலையை கண்காணிக்கும் மூளையின் செயல்பாட்டில், ஏற்படும் வேறுபாட்டில் விளைவதால் ஏற்படுகிறது.

கனவுகளின் பாதிப்பை தடுப்பது எப்படி?

உறங்கச் செல்லும் முன் முகம், கை, கால்களை நன்கு கழுவி விட்டு, இன்றைய நாளை நலமுடன் கழிய வைத்த இறைவனையோ அல்லது இயற்கையையோ நினைத்துக் கொண்டு, இடதுபுறம் ஒருக்கணித்துப் படுத்து உறங்க வேண்டும்.

இதேபோல் தினமும் உறங்கினால், கனவுகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்