கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது? அறிவியல் காரணம் இதோ

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

முன்னோர்கள் பின்பற்றிய சில சடங்கு முறைகளை நாம் இன்றளவும் பின்பற்றி வருகின்றோம். அதில் கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது.

ஆனால் அதற்கான காரணம் என்னவென்பது நம் அனைவருக்கும் தெரியாது. இதோ அதற்கான அறிவியல் விளக்கம்,

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது ஏன்?

நமது இரண்டு புருவங்களுக்கும் இடையில் நாம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

அதை தொட்டு தூண்டும் போது, அங்கு உருவாகும் வெப்பம் கட்டுப்படுத்தப்படும், இது ஒரு சம்பிரதாய முறையாகும்.

அதுவே திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பின் இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள், அது தான் நடு நெற்றி வகுடு, இந்த இடத்தில் தினமும் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பார்கள்.

பெண்களுக்கு நெற்றி வகுடுவில் தினமும் தொடுவதால் அவர்களுக்கு அடி வயற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்பட்டு கர்ப்பபை வலு பெறுகிறது.

கர்ப்பப்பை வலிமை பெற்றால் குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகப்பிரசவம் ஏற்படும்.

எனவே திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உறவில் நல்ல ஆர்வமும் கர்ப்பபை வலிமையும் பெற வேண்டும் என்பதற்காக நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

ஆனால் கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டப்படாமல் இருபதற்காக கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடுவில் உள்ள பொட்டை வைக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்