காதலி தன் காதலனிடம் கேட்க விரும்பும் கேள்விகளும்..அதற்கான பதில்களும்

Report Print Santhan in வாழ்க்கை முறை
0Shares
0Shares
Cineulagam.com

பெண்களால் கேள்விகள் கேட்காமல் இருக்கவே முடியாது. பொதுவாக காதலன் அவனது நண்பர்களுடன் எங்காவது வெளியே சென்று வந்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்.

அந்த வகையில், தான் காதலிக்கும் ஆணிடம் பெண்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என பொதுவாக ஒரு பட்டியல் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...

நான் இல்லாத போது நீ போக விரும்பும் இடம்?

நீங்கள் உங்களுக்கு பிடித்த எந்த இடத்தை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், கடைசியில் நீயும் உடன் இருந்தால் அது மிகவும் சிறப்பாக அமையும் என்பது போல கூறி முடித்துவிடுங்கள்.

குழந்தைகள் பிடிக்குமா?

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பிடிக்கும் என்றே கூறுங்கள், ஏனெனில், பெரும்பாலான பெண்களுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். இதற்கு துணைக் கேள்வியாக ஆணா, பெண்ணா? என்றும் கேட்பார்கள்.

ஓர் பெண் சிறந்தவள் என்று எதை வைத்து நீ கூறுவாய்?

அடக்க ஒடுக்கம் என பழைய பதில்களை கூறி வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டாம். தைரியம், சுதந்திரம், தனித்தன்மை என புதியதாக கூறி தப்பித்துக் கொள்ளுங்கள்.

திடீரென நிறைய பணம் கிடைத்தால், எனக்கு என்ன வாங்கி தருவாய்?

கண்டிப்பாக எதையும் குறிப்பிட்டு கூற வேண்டாம். நீ கேட்பதை, உனக்காக எதை வேண்டுமானாலும் என்பது போல பொதுவான பதில்களை கூறி சமாளித்துவிடுங்கள். சில பெண்களுக்கு அதிக செலவு செய்வது பிடிக்கும், சில பெண்களுக்கு செலவு செய்வது பிடிக்காது.

இருபது வருடம் கழித்து என்னைப் பற்றி நீ என்ன நினைப்பாய்?

இப்போது போலவே அன்றும் உன்னை காதலித்துக் கொண்டு தான் இருப்பேன். இன்னும் உன்மேல் அதிக அன்பு செலுத்த இரண்டு குழந்தைகளும் உடனிருக்கும் என நாலைந்து பிட்டுகளை அடித்துவிடுங்கள். அப்போ யோசிப்போம், இப்போ எதுக்கு என எடக்கு மடக்காக பதில் கூற வேண்டாம்.

உன்னை பொறுத்தவரை காதல் என்றால் என்ன?

காலம், காலமாக கூறப்படுவது தான், உண்மை, நேர்மை, கடமை தவறாமல் இருப்பது. ஒருவரை ஒருவர் முழுவதாக புரிந்துக் கொள்வது தான் உண்மையான காதல்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்