நீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள்? அதற்கான பலன்களை படித்து பாருங்கள்!

Report Print Printha in வாழ்க்கை முறை
1577Shares
1577Shares
lankasrimarket.com

ஒருவரின் வாழ்க்கையில் நன்மை, தீமைகள், பாதிப்புகள் ஆகியவை பூமியின் அசைவிற்கும் கிரகங்களின் அமைப்பு தன்மைகளுக்கு ஏற்றவாறு அதற்கான பலன்களை அடைவார்கள்.

அதன் அடிப்படையில் ஒருவரின் பிறந்த கிழமையை வைத்து அவர்களுக்கான பலன்கள் என்னவென்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

ஞாயிறு

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் செல்வச் செழிப்பு விருத்தியுடன், செல்வாக்கு விருத்தியும் பெற்று வாழ்வார்கள். அவர்கள் தனது வயதில் 40-45 வயதிற்கு மேல் மிகுந்த பேரும் புகழும் பெற்று மிகவும் சந்தோஷமான வாழ்க்கை அடைவார்கள்.

திங்கள்

திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் செல்வாக்கு, பேரும் புகழும் பெற்று, அனைவராலும் மதிக்கத்தக்கப்படி வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் மாலை நேரங்களில் செய்கின்ற முயற்சிகளில் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

செவ்வாய்

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் தனது கடுமையான உழைப்பினால் முன்னேற்றம் அடைந்து குறிப்பிட்ட இலக்கை அடைவார்கள். இவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் போற்றப்படுவார்கள்.

புதன்

புதன் கிழமையில் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பான கலைஞராகத் திகழ்வார்கள். இவர்கள் கல்வி, கேள்வி, ஞானம், பட்டப் படிப்பு ஆகியவற்றில் உயர்ந்த பதவியை அடைவார்கள்.

வியாழன்

வியாழன் கிழமையில் பிறந்தவர்கள் மற்றவருக்குப் போதிக்கக் கூடிய தகுதி பெறுவார்கள். இவர்கள் மற்றவருக்கு உதவி செய்து தியாக வாழ்க்கையை மேற்கொள்பவராக அடையப் பெறுவர்கள்.

வெள்ளி

வெள்ளிக் கிழமையில் பிறந்தவர்கள் சடங்கு, சம்பிரதாயங்களில் பூர்ண நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். அனைவராலும் போற்றுகின்ற வகையில் ஆன்மீகப் பணியில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் திகழ்வார்கள்.

சனி

சனிக் கிழமையில் பிறந்தவர்கள் அதிகமாக சமயோசித புத்தி பெற்று சிறந்த தந்திரசாலித் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்