இரண்டு ஆடுகளை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு! நகர முடியாமல் திணறல்: பகீர் வீடியோ

Report Print Raju Raju in மலேசியா
0Shares
0Shares
lankasrimarket.com
மலேசியா நாட்டில் பல விவசாய கிராமங்கள் உள்ளது. அதில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வேலையில் எப்போதும் போல ஈடுபட்டுள்ளர்.
அப்போது அங்கு ஊர்ந்து வந்த 16 அடி கொண்ட மிகபெரிய மலைபாம்பு அங்கிருந்த 2 ஆடுகளை ஒரே சமயத்தில் வாயில் போட்டு விழுங்கியது.
மலைப்பாம்பின் வாயில் போன ஆடுகள் வயிற்றில் ஒரே நேரத்தில் இறங்கியதால் பாம்பால் அதை செரிக்க முடியவில்லை.

இதனால் அந்த பாம்பு அங்கிருந்து நகர முடியாமல் திணறி கொண்டிருந்தது. இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்த பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்தனர்.

அதன் படி பெரிய கொம்பை வைத்து அந்த பாம்பை முதலில் வாயில் தள்ளியிருந்து குத்தினார்கள். பின்னர் 8க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அந்த பாம்பின் வாயை துணியால் இறுக்க கட்டினார்கள்.
பின்னர் ஒரு லொரியில் அந்த பாம்பை ஏற்றி தங்கள் கிராமத்திலிருந்து வெகு தூரம் எடுத்து சென்று அதை காட்டு பகுதியில் விட்டுள்ளார்கள்.
இது குறித்து அந்த கிராம வாசிகள் கூறுகையில், எங்கள் வாழ்க்கையில் இதுவரை இவ்வளவு பெரிய பாம்பை நாங்கள் பார்த்ததில்லை.
நல்லவேளையாக அதை வேறு இடத்துக்கு கொண்டு சென்று விட்டு விட்டோம் என அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments