ஆபத்தான ரசாயனம்: கிம் ஜாங் நாம் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in மலேசியா
0Shares
0Shares
Cineulagam.com

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரரை கொலை செய்ய மிகவும் ஆபத்தான விஷத்தன்மை கொண்ட வி.எக்ஸ். ரசாயன திரவப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜாங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜாங் நாம் கடந்த 13ஆம் திகதி மலேசியாவின் விமான நிலையத்தில் இரண்டு இளம் பெண்களால் ரசாயன விஷம் வைத்து கொள்ளப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் டோன் தி ஹுங், சிட்டி ஆயிஷா ஆகியோரை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கிம் ஜாங் நாம் மீது தெளிக்கப்பட்ட திரவம், வி.எக்ஸ். என்ற நச்சு ரசாயனம் என்பது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது, இது நரம்பு மண்டலத்தை முடக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த ரசாயனத்தை தெளித்த சில விநாடிகளில் மரணம் நேரிடும். அதனால் இந்த ரசாயனம் மலேசியா விமான நிலையத்தில் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதை யாராவது சுவாசித்தால் கூட அவர்கள் நரம்பு மண்டலம் பாதித்துவிடும். இதனால் மலேசிய விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments