மாயமான மலேசிய விமானம்: 239 பேரின் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in மலேசியா
0Shares
0Shares
lankasrimarket.com

2014ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்.எச் 370-யுடன், அதில் பயணித்தவர்களையும் தேட விமானத்துடன் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அதிரடி முடிவெடுத்துள்ளனர்.

மூன்று ஆண்டாக நடைபெற்று வந்த தேடும் விமானத்தை தேடும் பணிகள் ஜனவரி 17 அன்று நிறுத்தப்பட்டது. குறித்த விமானத்தில் 239 பேர் பயணித்தனர் என்பது நினைவுக் கூரதக்கது.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் இணைந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டி தங்களது சொந்தங்களை தொடர்ந்து தேட முடிவு செய்துள்ளனர்.

நிதி திரட்டும் பணிகளை ஜக்யூட்டா ஜோம்ஸ் என்ற பெண்மணி தலைமையேற்று நடத்துகிறார்.

இதுகுறித்து ஜோம்ஸ் கூறியதாவது, மலேசிய விமானம் வரலாற்று புத்தகத்தில் மர்மமாகவே முடிந்து விட கூடாது என தெரிவித்துள்ளார். இவரின் கணவர் மாயமான விமானத்தில் ஊழியராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments