சவுதி மன்னரை படுகொலை செய்ய சதித்திட்டம்: மலேசியாவில் பரபரப்பு

Report Print Basu in மலேசியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்களை அதிரடியாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இத்தகவலை மூத்த மலேசிய பொலிஸ் அதிகாரி வெளியிட்டுள்ளார். மன்னரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

advertisement

கடந்த இரண்டு வருடங்களாக ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் மன்னரை கொல்ல சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி மன்னர் சல்மான் பின் இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த நிலையில் தற்போது மலேசியாவிற்கு சென்றுள்ளார்.

சவுதி மன்னரின் மலேசிய பயணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ஏழுபேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக மலேசிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏமனிலிருந்த வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்ளிட்ட ஏழுபேரை மன்னரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்த குற்றத்திற்காக பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments