காணாமல் போன மலேசிய விமானம் MH 370 பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in மலேசியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

முன்று வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியா விமானத்தில் பயணிகளுடன் மர்ம நபரும் உடன் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

மலேசிய விமானம் MH 370 கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது

advertisement

இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீரென மாயமானது.

மூன்று ஆண்டுகளாக பல நாடுகள் சேர்ந்து தேடியும் விமானம் இன்னும் கிடைக்கவில்லை.

சரியாக இன்றுடன் விமானம் காணாமல் போய் மூன்று வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் அதிகாரி Andre Milne கூறியுள்ள புதிய தகவலின் படி, விமானத்தில் அதிகாரபூர்வமான பயணிகள் எண்ணிக்கை 238 தான்.

ஆனால் விமானத்தில் 239 பயணித்துள்ளனர். அந்த 239வது மர்ம நபர் தான் விமானத்தை கடத்த முயற்சித்துள்ளார். இதில் தான் விபரீத சம்பவம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இன்னொரு தரப்பினரோ, வட கொரியா தலைவர் சர்வாதிகாரி கிம் ஜோங், மலேசிய விமான கடத்தலுக்கு பின்னால் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments