நடிகர் ரஜினிகாந்துக்கு மலேசிய அரசு தரப்போகும் உயர் பதவி

Report Print Raju Raju in மலேசியா
0Shares
0Shares
lankasrimarket.com

மலேசிய அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு மலேசியா சுற்றுலாத்துறை தூதர் பதவியை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேசியாவின் மலாக்கா சுற்றுலா துறை தூதராக பிரபல நடிகர் ஷாருக்கான் செயல்ப்பட்டு வருகிறார்.

அவர் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகளவில் மலேசியாவுக்கு கொண்டு வர தவறிவிட்டதாக மலேசியா சுற்றுலா துறை நினைக்கிறது.

இது தொடர்பாக மலேசியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஷி மொகமட் நஸ்ரி அப்துல் தலைமையில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.

அதில் நடிகர் ஷாருக்கானுக்கு பதிலாக நடிகர் ரஜினியை மலேசிய சுற்றுலா துறை தூதராக நியமிக்க அவர்கள் விரும்புவதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர்கள் ரஜினியை விரைவில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிகிறது.

இந்த பதவிக்கு மலேசிய அரசு நல்ல மரியாதையை வழங்கும் என தெரிகிறது. ஆனால் ரஜினி அதை ஏற்பாரா என்பது மிக பெரிய கேள்விகுறியாக உள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments