மலேசியாவில் பெண் ஒருவர் 6-வயது சிறுமியை காட்டு மிராண்டித்தனமாக அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மலேசியாவில் உள்ள ஒரு வீட்டில் 6-வயது சிறுமியை பெண் ஒருவர் ஒழுங்காக சாப்பிட மாட்டியா என்று கூறி, தான் கையில் வைத்திருந்த குச்சியை வைத்து உன்னை எவ்வளவு அடித்தாலும் என்று கூறி காட்டுமிராண்டித்தனமாக அடிக்கிறார்.
வலியில் துடித்த சிறுமி ஒன்றும் செய்ய முடியாமல் கதறி அழுகிறார். இருந்த போதும் அப்பெண் சிறுமியை அடிப்பதை விடவில்லை.
இது வைரலாக பரவியதால், அங்கிருக்கும் பொதுமக்கள் அப்பெண்ணிடம் சென்று ஏன் அடித்தாய், ஒரு சிறுமியை இப்படியா அடிப்பாய் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதன் பின்னர் அவர்கள் பொலிசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அப்பெண்ணை கைது செய்தனர். உடனடியாக கைது செய்த மலேசியா பொலிசாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.