சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண்ணை ஏன் தடுக்கவில்லை: தந்தை ஆவேசம்

Report Print Arbin Arbin in மலேசியா
3884Shares
3884Shares
lankasrimarket.com

மலேசியாவில் 6 வயது சிறுமியை பெண் ஒருவர் கொடூரமாக அடித்து துன்புறுத்தியதை ஏன் எவரும் தடுக்கவில்லை எனக் கேட்டு சிறுமியின் தந்தை ஆவேசப்பட்டுள்ளார்.

மலேசியாவில் சாப்பிட மறுத்த 6 வயது சிறுமியை பெண் ஒருவர் கொடூரமாக அடித்து துன்புறுத்திய காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் சிறுமியின் தந்தை குறித்த விவகாரம் தொடர்பாக தமது அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தனை கொடூரமாக தாக்கிய பெண்ணை ஏன் தடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், அடித்த தமது உறவினரும் அதை காணொளியாக பதிவு செய்தவரும் வேண்டும் என்றே இதை செய்துள்ளனரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது சிறுமியை துன்புறுத்திய தமது உறவினர் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமி தற்போது மருத்துவ உதவி பெற்ற பின்னர் வீடு திரும்பியதாகவும், சிறுமி நலமாக இருப்பதாகவும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments