இந்திய மாணவனுக்கு மலேசியாவில் நேர்ந்த கதி: சக மாணவர்களின் வெறிச்செயல்

Report Print Deepthi Deepthi in மலேசியா
1351Shares
1351Shares
lankasrimarket.com

மலேசியாவில் மாணவன் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா நாட்டிலுள்ள பினாங்கு பகுதியை சேர்ந்த நவீன்(18) என்பவன், அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று பினாங்கு நகரில் உள்ள கடைக்கு நவீன் தனது நண்பர் பிரவினுடன் சென்றிருந்தார்.

அப்போது, நவீனுடன் பயின்ற முன்னாள் பள்ளித்தோழர்கள் அங்கு வந்திருந்துள்ளனர். அவர்கள், நவீன் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கிண்டல் செய்துள்ளனர்.

இதில், கடும் வாக்குவாதம் ஏற்படவே, இவர்கள் இருவரையும் அந்த 5 பேர் கொண்ட மாணவர்கள் ஹெல்மெட்டால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனியாக சிக்கிக்கொண்ட நவீனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர். மேலும், அவரது முதுகுக்கு கீழ்பகுதியில் சிகரெட்களால் சுட்டும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் நவீனின் தலை மற்றும் வயிற்றின் உள்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். மூளை செயலிழந்த நிலையில் பினாங்கு நகரில் உள்ள ஜார்ஜ் டவுன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் மயங்கிய நிலையில் கிடந்த நவீன், நேற்று மாலை நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, நவீனை தாக்கியதாக 5 மாணவர்கள் மீது முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்த அடிதடி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து மாணவர்களையும் பினாங்கு நகர பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் நவீனுக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலை தொடர்பாக செய்தி வெளியானதும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வேதனையும் அதிர்ச்சியும் தெரிவித்திருந்தார்.

ஏனெனில், நவீனுக்கு தான் ஏ,ஆர் ரஹ்மான் போன்று சிறந்த இசையமைப்பாளர்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments