ரூ.2000 கோடி சொத்துக்கள் வேண்டாம்! காதலுக்காக எல்லாவற்றையும் உதறி தள்ளிய கோடீஸ்வரி

Report Print Raju Raju in மலேசியா
6854Shares
6854Shares
lankasrimarket.com

கோடீஸ்வரரின் மகள் ஒருவர் காதலனை கரம் பிடிக்க தனது கோடிக்கணக்கான சொத்துக்களை உதறி தள்ளியுள்ளார்.

மலேசியாவை சேர்ந்தவர் கோ கே பெங், மிகப்பெரிய கோடீஸ்வரரான இவரின் சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய் ஆகும்.

கே பெங்கின் ஒரே மகள் ஏஞ்சலின் பிரான்ஸிஸ் கோ, இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது உடன் படிக்கும் ஜடிடிஹா என்பவரை காதலித்துள்ளார்.

கரிபியன் தீவை சேர்ந்த ஐடிடிஹாவை தனது மகள் காதலிப்பதை கே பெங் ஒத்துக்கொள்ளவில்லை.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்தால் கோடிக்கணக்கான சொத்துக்களை இழக்க நேரிடும் என அறிந்தும் ஏஞ்சலா அவர்களின் சம்மதத்தை மீறி காதலனை கரம் பிடித்துள்ளார்.

ஏஞ்சலா - ஐடிடிஹா திருமணம் 30 பேர் முன்னிலையில் தேவாலயத்தில் மிக எளிமையாக நடந்தது.

புதுப்பெண் ஏஞ்சலா கூறுகையில், என் தந்தையின் நிலைப்பாடு தவறு என நான் நம்பினேன். அதனால் எது சரி என்கிற கேள்வியே எனக்குள் எழவில்லை, பணத்தை இழந்ததில் வருத்தமில்லை, சிக்கனமாக வாழ கற்றுக் கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்