காணாமல் போன மலேசிய விமான விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in மலேசியா
0Shares
0Shares
Seylon Bank Promotion

காணாமல் போன மலேசியா விமானத்தை கண்டுபிடிக்கும் தங்களின் முயற்சி முடிவுக்கு வந்து விட்டதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் MH370 ரக விமானம் கடந்த 2014-ல் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில் திடீரென காணாமல் போனது.

இதையடுத்து அவுஸ்திரேலியா, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மலேசியா மற்றும் சீனா கடந்த ஜனவரி மாதம் தேடுதல் வேட்டையை நிறுத்தின.

ஆனால், தேடுதல் வேட்டையை மீண்டும் தொடருவோம் என மலேசியா கூறிய நிலையில், தற்போது அவுஸ்திரேலியா தேடுதல் பணியை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

இதில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், எங்களால் விமானத்தை கண்டுப்பிடிக்க முடியவில்லை. விமானம் கிடைத்தால் மட்டுமே அது காணாமல் போனதற்கான காரணத்தை அறியமுடியும்.

10 மில்லியன் பயணிகள் ஒவ்வொரு நாளும் விமானங்களில் பயணிக்கும் நிலையில், குறித்த விமானம் குறித்த உறுதியான தகவல் எங்களுக்கு தெரியவில்லை.

MH370 இல் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு, விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வருத்தத்தோடு கூறிக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்