மரண தண்டனையிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்த பெண்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in மலேசியா
697Shares
697Shares
lankasrimarket.com

போதை மருந்து கடத்தியதாக அவுஸ்திரேலிய பெண் மீது மலேசிய நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

சிட்னியை சேர்ந்த மரியா எக்ஸ்போஸ்டோ (54) என்ற பெண் கடந்த 2014 டிசம்பரில் போதை மருந்து கடத்தி சென்றதாக மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மரியா வைத்திருந்த பையில் 1.5 கிலோ கிராம் போதை மருந்துகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.

மலேசியாவை பொருத்தவரை 50 கிராமுக்கு மேல் போதை மருந்துகள் கடத்தி பிடிபட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்படும்.

இந்நிலையில் மரியா மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவரை நீதிமன்றம் நிரபராதி என விடுவித்துள்ளது.

மரியா தனது தரப்பு ஞாயத்தை நீதிமன்றத்தில் எடுத்து கூறியுள்ளார், அதில் ஓன்லைன் மூலம் ஸ்மித் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது, அவர் தன்னை அமெரிக்க ராணுவ அதிகாரி எனவும் ஆப்கானிஸ்தானில் வேலை செய்வதாகவும் கூறினார்.

அவர் தான் என்னிடம் ஒரு பையை கொடுத்து ஷங்காயில் கொடுக்க சொன்னார், பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக நான் நினைத்திருந்த நிலையில் அதிகாரிகள் சோதனையில் தான் போதை மருந்துகள் இருப்பது எனக்கு தெரிந்தது என கூறினார்.

மரியாவின் வழக்கறிஞர் இது தொடர்பாக வாதாடிய நிலையிலேயே நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது, ஆனால் மரியா உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார் என கூறப்பட்டுள்ளது.

மரியா மீது இவ்வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அதை மலேசியா பொலிஸ் காவலில் இருந்தபடியே அவர் சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்