அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம்: பயத்தில் கண்ணீர் விட்டு அழுத பயணிகள்

Report Print Raju Raju in மலேசியா
0Shares
0Shares
Cineulagam.com

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறந்துகொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிர்ந்ததால் மத்திய அவுஸ்திரேலியாவில் அவசரமாக தரையிறக்கபட்டது.

எம்எச்122 என்ற அந்த விமானம் வியாழக்கிழமையன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

224 பயணிகள் உள்ளே இருந்த நிலையில் திடீரென விமானம் அதிர்வுற்றதுடன், அதிக அளவிலான இரைச்சலையும் ஏற்படுத்தியது.

நான்கு மணிநேரத்துக்கு இதுபோன்ற பிரச்சனையுடன் விமானம் பறந்தநிலையில் பாதுகாப்பு காரணமாக மத்திய அவுஸ்திரேலியாவில் தரையிறக்கப்பட்டது.

தொழில்நுட்பம் சார்ந்த காரணத்தினால் விமானம் திருப்பிவிடப்பட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமானத்தில் இருந்த ஒரு பயணி கூறுகையில், விமானத்தில் பயணித்த சிலர் பிரார்த்தனை செய்துக் கொண்டும் கண்ணீர் வடித்து கொண்டும் இருந்த அந்த தருணம் மிகவும் மோசமானது என கூறியுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்