உங்கள் உடலில் துர்நாற்றம் அடிக்கிறதா? காரணம் தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Deepthi Deepthi in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com

சிலரது அருகில் செல்லவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் அடிக்கும்.

இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறார்களே தவிர, எதற்காக நமது உடலில் துர்நாற்றம் அடிக்கிறது என கண்டறிவதில்லை.

எதற்காக துர்நாற்றம் அடிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்,

கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து புரோட்டினின் அளவை அதிகமாக்கும் போது உடலில் துர்நாற்றமடிக்க வாய்ப்புள்ளது.

கீட்டோன்கள் அதிகமாக வெளியேற்றப்பட்டு, இதனால் உடல் துர்நாற்றத்தை மட்டுமின்றி, சிறுநீர் துர்நாற்றமும் ஏற்படும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. எனவே கார்போஹைட்ரேட் உணவை அதிகமாக எடுத்தல் நல்லது.

மலச்சிக்கல் உள்ளவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். இவர்களின் உடலில் இருந்து டாக்ஸின்கள் முறையாக செரிமான மண்டலத்தின் வழியே வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவை சருமத்துளைகளின் வழியே வெளியேறும், இதனால் துர்நாற்றம் வீசும்.

மாட்டிறைச்சி உடல் துர்நாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது செரிமானம் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும், இதனால் உடலில் இருந்து வாயு வெளியேறி, துர்நற்றம் வரும். அதுமட்டுமின்றி, மாட்டிறைச்சியில் உள்ள அமினோ ஆசிட், சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும் போது, அது கெட்ட துர்நாற்றத்தை வீசும்.

சர்க்கரை நோயுள்ளவர்களின் உடலில் இன்சுலின் குறைபாடு உள்ளதால் கொழுப்புக்கள் உடைக்கப்படுகிறது. இப்படி உடைக்கும் போது அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தாலும், உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசும்.

மன அழுத்தத்தினால் வெளிவரும் வியர்வையில் துர்நாற்றம் அடிக்கும், ஏனெனில் இந்த வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியில் இருந்து சுரக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்